Ads (728x90)

கைதி எண் 150 படத்தை அடுத்து சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 22-ந் தேதியான இன்று சிரஞ்சீவியின் பிறந்த நாள். அதனால் இன்றைய தினம் சிரஞ்சீவியின் 151வது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலி டைரக்டர் ராஜமவுலி படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

இந்த படத்திற்கு முதலில் மகாவீரா என்ற தலைப்பு வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சே ரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இப்போது சே ரா -என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சப் டைட்டிலாக நரசிம்ம ரெட்டி என்று சேர்க்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget