புதிய கல்வி மறு சீரமைப்பு திட்டத்திற்கு அமைய கடந்தாண்டு நடைப்பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக் கிட்டவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து மாணவர்களுக்கு இவ்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இனங்காணப்பட்டுள்ள 43 பாடசாலைகளில் 26 தொழிநுட்பம் சார்ந்த பாடநெறிகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர கல்வியை கட்டாயப்படுத்தும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment