Ads (728x90)

சாம்சங் நிறுவனத்தின் நடுத்தர பட்ஜெட்டில் கிடைக்கும் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மற்றொரு ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஜெ சீரிஸ் மாடல்களில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

தாய்லாந்து இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களில் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் இரட்டை கேமரா அமைப்பினை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விளம்பர படத்தில் முன்பக்க பேனல் தெளிவாக தெரிவதோடு, இரட்டை கேமரா வழங்கப்படுவதை உணர்த்தும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + 5 எம்பி டூயல் கேமரா அமைப்பு, இதில் 5 எம்பி f/1.9  அப்ரேச்சர் மற்றும் 13 எம்பி f/1.7 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா மற்றும் f/1.9 அப்ரேச்சர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட், டூயல் சிம் கார்டு, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம். இரட்டை கேமரா அமைப்பு கொண்ட முதல் சாம்சங் ஜெ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படும் ஜெ7 பிளஸ் வெளியீடு சார்ந்து எவ்வித தகவல்களும் இல்லை. முன்னதாக கேலக்ஸி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது.

சில தினங்களுக்கு முன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டது. முதல் கேமராவில் f/1.7 அப்ரேச்சர் மற்றும் இரண்டாவது கேமராவில் f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டது. முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி கேமராவும், f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டது. இரண்டு பிரைமரி கேமராக்களிலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசர் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget