மழை,வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மிக கனமழை காரணமாக, நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதுவரை கனமழை, வெள்ளத்திற்கு 5 பேரை உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 48 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.இதனால் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ரயில் சேவைகள் முடங்கி உள்ளதால் மக்கள் அனைவரும் சாலைகளையே போக்குவரத்திற்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து வருவதால் சென்னை மற்றும் கோவையில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தானே உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளநீர் வடிய துவங்கி உள்ளதால் மின்சார ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. விமான ஓடுதளங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படையினரும், தன்னார்வலர்களும் உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
Post a Comment