தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ராக்கெட் 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட IRNSS 1-H செயற்கைகோள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள் மூலமாக இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல் சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையில் திட்டமிட்டப்படி 7 செயற்கைகோள்களை வெற்றிகரமாக இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Post a Comment