Ads (728x90)

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பரணி என்றொரு ஹீரோ இருக்கின்றாரா என்பதுகூட பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பரணி தமிழகம் முழுவதும் பிரபலம்,
பிக்பாஸ் வீட்டில் இருந்து பரணி கார்னர் செய்யப்பட்டு கிட்டத்தட்ட விரட்டப்பட்டார். குறிப்பாக பெண்கள் கூட்டம் பரணியின் மீது பொல்லாத பழியை போட்டு விரட்டியது. ஆனால் வெளியே வந்த பரணி, கமல்ஹாசனிடமும், மற்ற பேட்டியிலும் முதிர்ச்சியாக பேசியது பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது.
 
பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களிடம் பரணிக்கு செய்த துரோகம் குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்டதும்தான் அவர்களுக்கே அவர்களது தவறு புரிந்தது.
 
இந்த நிலையில் மக்கள் மத்தியில் பரிதாபத்தையும் அன்பையும் பெற்றுவிட்ட பரணியின் நடிப்பில் உருவான 'பணம் பதினொன்னும் செய்யும்' என்ற திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. இந்த படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் போட்டா போட்டி போடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget