Ads (728x90)

ஐஎன்எக்ஸ் மீடியா நீறுவனம் முறைகேடாக நேரடி அந்நிய முதலீடு செய்வதற்கு உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று (ஆக.,23) சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜரானார்.டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான கார்த்தியிடம் 100 க்கும் மேற்பட்ட கேள்விகளை சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது.

இவற்றில் பல கேள்விகள், முறைகேடாக பல கோடி அளவில் பணம் பெற்றது தொடர்பானது என கூறப்படுகிறது. காலை 10.20 மணிக்கு ஆஜரான கார்த்தியிடம் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்தி ரூ.3.60 கோடி அளவில் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கார்த்தியால் கையாளப்பட்ட தொழில் நடவடிக்கைகள் மூலம் இன்னும் எவ்வளவு பணம் கைமாறி உள்ளது என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வரும் என கூறப்படுகிறது.

ஆனால் மே 29 ம் தேதி சிபிஐ.,யிடம் கார்த்தி அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில், தனக்கும் ஐஎன்எக்ஸ் மீடியாக நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர்களிடம் இருந்து தான் பணம் ஏதும் பெறவில்லை எனவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.மீண்டும் ஆகஸ்ட் 28 ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கார்த்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கார்த்தியுடன் ஏஎஸ்சிபிஎல் இயக்குனர்கள் ரவி விஸ்வநாதன், மோகனன் ராஜேஷ், ஆடிட்டர் பாஸ்கர ராமன், சென்னை அலுவலக உதவியாளர் சின்ன பாலா நாகேஸ்வர ரெட்டி ஆகியோரும் ஆஜராக சிபிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget