சிறு பிள்ளைகள் உள்ளிட்ட சிரியப் பிரஜைகள் இலங்கையில் புகலிடம் கோரியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் சிறுவர்கள் ஆறு பேரும் உள்ளடங்குகின்றனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த 312 அகதிகள் இலங்கையில் புகலிடம் கோரி, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கைக் காரியாலயத்தில் இந்த ஆண்டு தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இலங்கையில் அகதி அந்தஸ்து கோரி பதிவு செய்து கொண்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 677 எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் புகலிடம் கோரியுள்ளவர்களில் அதிகளவானவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
Post a Comment