
உள்ளூராட்சித் தேர்தல்களை தொகுதி ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
இத்திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலப்பு முறையில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது, மேலும் உள்ளூராட்சி சபைகளில் தேர்தல்களின் வேட்பாளர் பட்டியலில் 25 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்குவ தற்கு வகை செய்தல் போன்ற திருத்தங்கள் உள்ளூராட்சித் தேர்தல் (திருத் தச்) சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Post a Comment