வடக்கு மாகாணத்தில் புதிதாக எட்டுப் பாலங்கள் அமைக்கப்படுகின்றபோதும் மாகாண சாலை அபிவிருத்தி அதிகார சபையினரின் எவ்வித பங்குபற்றலும் இல்லாது அதிகார சபையின் கொழும்பு அதிகாரிகளே வடக்குக்கு வந்து அவற்றின் பணிகளை முன்னெடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் தொடர்பில் சாலை யின் பொறுப்பாளிகள் என்ற வகையில் நாம் இணைந் துள்ளோமே தவிர கட்டுமானம் சார்ந்த எந்தவொரு விட யங்களுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்று மாகாண சாலை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:‘ஜெய்க்கா’ சிறப்பு செயற் திட்டத்தின்கீழ் நாடு முழுவ தும்.37 பாலங்களை அமைப்பதற்கு 3.78 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கிலும் 8 பாலங்கள் அமைப்பதற்கு மூவாயிரத்து 800 மில்லி யன் ரூபா கிடைத்துள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது 20 மாதங்களை கொண்ட செயற்திட்டமாக அமைகின்றது. இந்தப் பாலங்கள் அமைப்பு தொடர்பில் சில குறைபாடுகள் உள்ளதாக அண்மையில் நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் வேலைகளுக்காக மணலுக்குப் பதிலாக ‘குவாரி டஸ்ட்’ பயன்படுத்துவது தொடர்பாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஏனைய மாவட்டங்களில் மணல் பயன்படுத்துகின்றது.வடக்கு மாகாணத்தில் பாலம் அமைக்கவேண்டிய இடங்களைத் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
வடக்கு திணைக்களத்துக்குச் சொந்தமான சாலைகளில் பாலங்கள் அமைக்கப்படுவதால் நாம் அவற்றின் செயற்பாட்டில் ஒரு பகுதியாக மாத்திரமே வடக்கு அலுவலர்கள் தேவை யேற்ப டின் இணைவர்.
பாலம் அமைப்பதற்கு சாலைகளில் தடையாகக் காணப்படும் விடயங்க ளைச் சீர்செய்து கொடுக்கும் பணிகளை மாத்திரம் வடக்கு பணியாளர்கள் செய்கின்றனர்.
ஏனைய விடயங்கள் யாவற் றையும் ஜெய்கா சிறப்பு செயற் றிட்டத்தின் கீழ் உள்ள அதிகாரிகளே முன்னெடுத்து வருகின்றனர். பாலத்தின் அமைப்பு, தொழிநுட்ப உதவியாளர்கள், பொறியியலாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என அனைத்து வளங்களையும் அவர்களே தங்கள் சார்பில் நியமித்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. எங்கள் உத்தியோகத்தர்கள் எவரும் இந்த பாலம் அமைப்பு செயற்திட்டத்தில் இல்லை – என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment