பிரான்ஸ் நாட்டின் மார்செய் நகரில் அடுத்தடுத்து 2 பேருந்து நிறுத்தங்களில் நின்றவர்கள் மீது ஒரு கார் மோதியது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது வாகனங்களை மோதி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 17-ம் தேதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் வேனை மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் மார்செய் நகரில் நேற்று அதிவேகமாக வந்த கார் அடுத்தடுத்து 2 பேருந்து நிறுத்தங்களில் நின்ற பயணிகள் மீது மோதியது. இதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். காரை ஓட்டிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Post a Comment