
கணினி அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக விண்டோஸ் இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை போன்று கணினிகளுக்கு விண்டோஸ் இயங்குதளம் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்கள் பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு பல்வேறு இலவச செயலிகளையும் வழங்குகிறது.
இங்கு விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த இலவசமாக கிடைக்கும் டாப் 5 செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபயர்ஃபாக்ஸ்:
விண்டோஸ் இயங்குதளத்தில் வழங்கப்படும் பிரவுசர்களையே இன்றும் பயன்படுத்துபவர் எனில், உங்களுக்கு ஏற்ற பிரவுசராக ஃபயர்ஃபாக்ஸ் இருக்கிறது. எளிமையான அம்சங்கள், வேகமாக இயங்குவதோடு பாப்அப்களையும் பிளாக் செய்யும் திறன் கொண்டுள்ளது.
தண்டர்பேர்ட்:
அதிகப்படியான அம்சங்கள் நிறைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்ட் இருக்கிறது. மேலும் இணையத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மால்வேர் தாக்குதல்களை அனுமதிக்காமல், கோளாறான இணையதளங்கள் சார்ந்த தகவல்களை வழங்கும். மேலும் இது மெமரி குறைவாக இருப்பதோடு வேகமாகவும் இருக்கிறது.
சிகிளீனர்:
கணினியின் வேகம் குறைவாக இருக்கிறதா? கணினியின் வேகத்தை அதிகரிக்க சிகிளீனர் கொண்டு கணினிகளை ஸ்கேன் செய்யலாம் இவ்வாறு செய்யும் போது கணினியில் உள்ள தேவையற்ற தரவுகளை அழித்து மெமரியை அதிகரித்து கணினியின் வேகத்தை சீராக்கும்.
ரெக்குவா:
ரெக்குவா மென்பொருள் கொண்டு கணினியில் சேமித்து வைக்கப்பட்டு தவறுதலாக அழிந்து போன தரவுகளை மீட்க முடியும். மற்ற ரிக்கவரி மென்பொருள்களை விட ரெக்குவா எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.
வி.எல்.சி. மீடியா பிளேயர்:
கணினி வாங்கியதும் பெரும்பாலானோர் முதலில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருளாக வி.எல்.சி. மீடியா பிளேயர் இருக்கிறது. அனைத்து விதமான ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களையும் இயக்குவதோடு எளிய யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.
Post a Comment