Ads (728x90)

வளர்ந்து வரும் இலங்கை- சீன உற­வு­கள் குறித்து இந்­திய நிபு­ணர்­கள் அச்­சம் கொண்­டுள்­ள­னர் என்று இந்திய ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தின் 70 வீத உரி­மையை 99 ஆண்­டு­க­ளுக்கு இலங்கை அரசு சீனா­வுக்கு வழங்­கி­யுள்­ளமை குறித்து, தேவி­ரூப மித்ரா என்­ப­வர் எழு­தி­யுள்ள கட்­டு­ரை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­ தா­வது:
இந்த ஒப்­பந்­தத்­தில் கூறப்­பட்­டுள்ள பாது­காப்பு உத்­த­ர­வா­தங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்று இந்­தியா நம்­பு­கி­றது, எனி­னும், இந்­தத் துன்­ப­க­ர­மான விற்­பனை போன்ற நிலை அண்­டை­ நாட்­டில் உள்ள ஏனைய திட்­டங்­க­ளுக்­கும் ஏற்­ப­டுமோ என்ற அச்­ச­மும் அதற்கு உள்­ளது.
அம்­பாந்­தோட்­டைத் துறை­முக ஒப்­பந்­தத்தை புது­டில்லி வர­வேற்­க­வில்லை. ஆனால், சீனா­வின் கடன் பளு­வில் இருந்து தப்­பிப்­ப­தற்கு, கொழும்­புக்கு வேறு நல்ல வழி இல்லை. இத­னால், அம்­பாந்­தோட்­டை­யைச் சீன நிறு­வ­னம் நிர்­வ­கிப்­பதை ஏற்­றுக் கொள்­வ­தை­விட இந்­தி­யா­வுக்கு வேறு தெரிவு இல்லை.
இந்த ஒப்­பந்­தம் குறித்த பேச்­சுக்­கள் மற்­றும் அதில் பாது­காப்பு குறித்த சில பிரி­வு­களை உட்­சேர்ப்­ப­தில், அமெ­ரிக்­கா­வு­டன் இந்­தி­யா­வும், தொடர்­பு­பட்­டி­ருந்­தன என்­றும் உறு­திப்­ப­டுத்த முடி­கி­றது.
எந்­த­வொரு இரா­ணு­வச் செயற்­பா­டு­க­ளை­யும் இங்கு முன்­னெ­டுப்­ப­தற்கு கடு­மை­யான தடை­கள் விதிக்­கப் ­பட்­டுள்­ளன என்­றும் இரா­ணு­வச் செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளும் முழு உரி­மை­யும் இலங்­கைக்கே உள்­ளது என்­றும் ஒப்­பந்த வரை­வில் கூறப்­பட்­டி­ருந்­தது.
துறை­முக பாது­காப்­புச் சேவை­க­ளில் ஈடு­ப­டும் அனை ­வ­ருமே இலங்­கை­யர்­க­ளாக இருக்­க­வேண்­டும் என்ற விதி­மு­றை­யும் சேர்க்­கப்­பட்­டுள்­ள­து -­என்­றுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget