வாரிய தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 103 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன் குவித்தது. வார்னர் 64 ரன் (48 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் ஸ்மித் 55 ரன் (68 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட் 65 ரன் (63 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 76 ரன் (60 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), வேட் 45 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.
அடுத்து களமிறங்கிய வாரிய தலைவர் லெவன் அணி 48.2 ஓவரில் 244 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கோஸ்வாமி 43, அகர்வால் 42, ராணா 19, கேப்டன் குர்கீரத் 27, கர்னிவா 40 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), குஷாங் பட்டேல் 41* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஏகார் 4, ரிச்சர்ட்சன் 2, பாக்னர், ஸம்பா, ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி 103 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி, இதே மைதானத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.
Post a Comment