வாலு படத்தின் இயக்குநர், விக்ரமை கொண்டு இயக்கி வரும் படம் "ஸ்கெட்ச்". தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கலைப்புலி எஸ்.தாணுவின், வி கிரியேசன்ஸ் தயாரிக்கிறது. வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் படம் இது. படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்கிடையே ஸ்கெட்ச் படத்தில், "அச்சி புச்சி ஸ்கெட்ஸ்..." என்ற பாடல் பிரமாண்டமாய் உருவாக வருகிறது. 150 நடன கலைஞர்கள், 1500 மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்க தஸ்தாகீர் நடன அமைப்பில் இந்த பாடல் படமாக்கப்பட்டது.
Post a Comment