Ads (728x90)

 ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் எய்பர் அணியை மிக எளிதாக வீழ்த்தியது. பார்சிலோனா அணி சார்பில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 4 கோல் போட்டார் (20, 59, 62, 87வது நிமிடம்). பாலின்ஹோ (38’), டெனிஸ் சுவாரெஸ் (53’) தலா 1 கோல் அடித்தனர்.

எய்பர் வீரர் என்ரிச் 57வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். கடந்த 13 ஆண்டுகளாக லா லிகா தொடரில் விளையாடி வரும் மெஸ்ஸி, பார்சிலோனா அணியின் சொந்த மைதானமான கேம்ப் நோவில் இதுவரை 301 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget