Ads (728x90)

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கின் தீர்ப்பு எதிர்­வ­ரும் 27ஆம் திகதி வழங்­கப்­ப­டும் என்று சிறப்­புத் தீர்ப்­பா­யம் அறி­வித்­தது.
வழக்கு தொடு­னர் மற்­றும் எதி­ரி­கள் தரப்பு தொகுப்­பு­ரை­கள் நேற்று நிறை­வ­டைந்த நிலை­யி­லேயே தீர்ப்­புக் கான திக­தியை தீர்ப்­பா­யம் நேற்று நிர்­ண­யித்­தது.

புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கோர­மா­கக் கொலை செய்­யப்­பட்­டார்.
இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) முன்­னி­லை­யில் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்று வரு­கி­றது.

வழக்­குத் தொடு­னர் தரப்பு மற்­றும் 9 எதி­ரி­க­ளின் சாட்­சி­யப் பதி­வு­கள் கடந்த 29ஆம் திக­தி­யு­டன் நிறை­வ­டைந்­தன. இரு தரப்பு தொகுப்­பு­ரை­கள் நேற்­று­முன்­தி­ன­மும் நேற்­றும் முன்­வைக்­கப்­பட வேண்­டும் என்று தீர்ப்­பா­யம் கட்­ட­ளை­யிட்­டி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டை­யில் அரச தரப்பு தொகுப்­புரை நேற்­று­முன்­தி­னம் நிறை­வ­டைந்­தது. அதில் இந்த வழக்­கில் 2ஆம் 3ஆம் 5ஆம் 6ஆம் எதி­ரி­கள் மீதான வண்­பு­ணர்வு மற்­றும் கொலைக் குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் 4ஆம் 8ஆம் 9ஆம் எதி­ரி­கள் மீதான சதித் திட்­டம் தீட்­டி­யமை மற்­றும் குற்­றச்­செ­ய­லுக்கு உடந்­தை­யாக இருந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் அரச தரப்பு உறு­தி­யாக எடுத்­துக் கூறி­யது. மேலும் 1ஆம் மற்­றும் 7ஆம் எதி­ரி­கள் நிர­ப­ரா­தி­கள் என்­றும் அது சுட்­டிக்­காட்­டி­யது.
இந்த நிலை­யில் எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளின் தொகுப்­பு­ரை­கள் நேற்று முன்­வைக்­கப்­பட்­டன.

வழக்கு தொடு­னர் தரப்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி. குமா­ர­ரட்­ணம் தலை­மை­யில் அரச சட்­ட­வா­தி­கள் நாக­ரத்­தி­னம் நிஷாந்த், மாதினி விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­னர். எதி­ரி­கள் தரப்­பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்­றும் 8ஆம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்த்­தன , மற்­றும் சட்­டத்­த­ரணி லியகே ஆகி­யோ­ரும், 5ஆம் எதி­ரி­யின் சார்­பில் சட்­டத்­த­ரணி ஆறு­மு­கம் ரகு­ப­தி­யும் 4ம், 7ம் , மற்­றும் 9ம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர்.

அத்­து­டன் ஒன்று தொடக்­கம் 9 வரை­யான எதி­ரி­கள் சார்­பில் தீர்ப்­பா­யத்­தால் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி விக்­னேஸ்­வ­ரன் ஜெயந்­தா­வும் முன்­னிலை முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தார். எதி­ரி­க­ளான பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் , மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகி­யோர் தீர்ப்­பா­யத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அத­னைத் தொடர்ந்து 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்­றும் 8ஆம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்த்­தன தனது தொகுப்­பு­ரையை முன்­வைத்­தார்.
“இந்த வழக்­கில் முக்­கிய சாட்­சி­ய­மாக இப்­ரான் என்­ப­வ­ரின் சாட்­சி­யத்தை வழக்கு தொடு­னர் தரப்பு முன்­நி­றுத்தி உள்­ளது.

அந்­தச் சாட்சி ஏற்­க­னவே மோசடி குற்­ற­சாட்­டில் சிறை தண்­டனை அனு­ப­வித்து வரும் நப­ரா­வார். அவ­ரது சாட்­சி­யத்தை முன்­னி­லைப்­ப­டுத்த முடி­யாது. அந்த சாட்­சி­யம் நம்­ப­கத்­த­னைமை அற்­றது. சுவிஸ் குமார், குற்­ற­பு­ல­னாய்வு திணைக்­கள பொலிஸ் பரி­சோ­த­க­ருக்கு இலஞ்­சம் கொடுக்க முயன்­றுள்­ளார் எனில் , ஏன் பொறுப்­புள்ள பொலிஸ் அதி­காரி அது தொடர்­பில் முறைப்­பாடு செய்­ய­வில்லை.

அதே­போன்று குற்­றச் செயலை கண்­ணால் கண்ட சாட்­சி­யம் என தீர்ப்­பா­யத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்ட இரு சாட்­சி­க­ளும் , முரண்­பா­டான சாட்­சி­யங்­க­ளையே அளித்­துள்­ளன. சுரேஷ்­க­ரன் என்­ப­வர் சாட்­சி­யம் அளிக்­கை­யில், “வன்­பு­ணர்வை காணொலி, ஒளிப்­ப­டங்­கள் எடுத்­தது தொடர்­பில் தெரி­யாது என சாட்­சி­யம் அளித்­துள்­ளார். அதே இடத்­தில் நின்ற மற்­று­மொரு சாட்­சி­யான மாப்­பிள்ளை என அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன், காணொலி மற்­றும் ஒளிப்­ப­டங்­கள் எடுத்­தது என சாட்­சி­யம் அளித்­துள்­ளார். இந்த இரு சாட்­சி­யங்­க­ளும் முர­ணான சாட்­சி­யங்­களை வழங்கி உள்­ளது.

எனவே இந்­தக் குற்­றச் சம்­ப­வம் தொடர்­பில் எனது தரப்­பி­ன­ருக்கு எதி­ராக சந்­தே­கத்­துக்கு இட­மின்றி குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­ய­வில்லை” எனத் தெரி­வித்­தார். அதனை தொடர்ந்து 5ஆம் எதி­ரி­யின் சார்­பில் சட்­டத்­த­ரணி ஆறு­மு­கம் ரகு­பதி தொகுப்­பு­ரை­யில், “இந்த வழக்­கின் கண்­கண்ட சாட்­சி­யாக முற்­ப­டுத்­த­பப்ட்ட உத­ய­சூ­ரி­யன் சுரேஷ்­க­ரன் என்­ப­வர் தின­மும் ஒரு போத்­தல் சாரா­ய­மும் 4 போத்­தல் கள்­ளும் குடிப்­பேன் என அவ­ரது சாட்­சி­யத்­தின் போது தெரி­வித்­தி­ருந்­தார்.

தின­மும் மது­போ­தை­யில் இருக்­கும் குடிக்கு அடி­மை­யான ஒரு­வர் குடி­ப­தற்­காக எது­வும் செய்­யத் துணிந்­த­வர். அவ­ருக்கு குடிக்க கொடுத்து தமக்கு வேண்­டிய காரி­யங்­களை எவ­ரே­னும் செய்து கொள்ள முடி­யும். எனவே அவ­ரின் சாட்­சி­யம் நம்­ப­கத்­தன்மை அற்­றது” எனத் தெரி­வித்­தார். குடி­கா­ரன் சாட்சி சொல்ல கூடாது என சட்­டம் சொல்லி இருக்கா ? என தீர்ப்­பா­யம்­கேள்வி எழுப்­பி­யது. அதற்கு பதி­ல­ளித்த சட்­டத்­த­ரணி, அவ்­வாறு இல்லை. இந்த சாட்­சி­யத்­தின் நம்­ப­கத்­தன்மை அற்­ற­தாக உள்­ளது என கூறி­னார்.

தொடர்ந்து தொகுப்­பு­ரை­யில் தெரி­விக்­கை­யில் , அடுத்த கண்­கண்ட சாட்­சி­ய­மாக முற்­ப­டுத்­தப்­பட்ட மாப்­பிள்ளை என அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் , இவர் சட்­ட­வி­ரோ­த­மாக வீட்­டில் கள்ளு விற்­பனை செய்­ப­வர். அதற்­காக பல தட­வை­கள் அவ­ரைப் பொலி­ஸார் கைது செய்து நீதி­மன்­றில் முற்­ப­டுத்தி தண்­டம் செலுத்­தி­யுள்­ளார்.அவர் தனது சாட்­சி­யத்­தில் 2ஆம் , 3ஆம் , 5 ஆம் , மற்­றும் 6ஆம் எதி­ரி­கள் தன்­னு­டைய வீட்­டில் இருந்து கள்ளு அருந்­தும் போது­தான் வித்­தி­யாவை கடத்த திட்­டம் தீட்­டி­ய­தா­க­வும் , தன்­னு­டைய வீட்­டில் வைத்­து­தான் பொறுப்­புக்­கள் பகி­ரப்­பட்­ட­த­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார். அத்­து­டன் மாணவி கடத்­தப்­பட்டு , வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு , படு­கொலை செய்­யப்­ப­டும் வரை­யில் தான் அவர்­கள்­கூட இருந்­த­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார். அவ்­வாறு எனில் அவர் சாட்­சி­ய­மாக இந்­தத் தீர்ப்­பா­யத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டி­ய­வர் இல்லை.

அவ­ரை­யும் எதி­ரி­யாக இந்­தத் தீர்ப்­பா­யத்­தில் நிற்க வேண்­டி­ய­வர். ஏன் அவரை எதி­ரி­யாக சேர்க்­க­வில்லை? என்­பது தெரி­ய­வில்லை. அடுத்த முக்­கிய சாட்­சி­யாக முற்­ப­டுத்­தப்­பட்ட இப்­ரான் , இவர் மோசடி வழக்­கில் குற்­ற­வா­ளி­யாக கண்டு தண்­டனை கைதி­யாக சிறை­யில் இருப்­ப­வர். அவ்­வா­றான மோச­டிச் குற்­றச்­சாட்­டில் உள்ள ஒரு­வ­ரின் சாட்­சி­யம் நம்­ப­கத்­தன்மை உடை­யதா ? ஒரு குற்­றத்­திற்கு ஒரு நோக்­கம் இருக்­க­லாம். ஆனால் இந்­தக் குற்­றத்­துக்கு இரு நோக்­கங்­கள் உள்­ள­தாக வழக்கு தொடு­னர் தரப்பு குற்­ற­று்­சாட்­டு­கின்­றது.
6ஆம் எதிரி மாண­வியை ஒரு தலை­யா­கக் காத­லித்­த­தா­க­வும் , அதற்கு மாணவி மறுப்பு தெரி­வித்து அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­தால் பழி­வாங்க செய்­யப்­பட்­ட­தா­க­வும். மற்­றை­யது சுவிஸ் நாட்­டில் வசிக்­கும் நபர் அங்­குள்ள மாபியா கும்­பல் கேட்­ட­தற்கு இணங்க ஆசி­யப் பெண் ஒரு­வர் கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்­யும் நேரடி காணொ­லிக் காட்­சி­யாக இந்­தக் குற்­றம் புரி­யப்­பட்­ட­தா­க­வும் அரச தரப்­புக் கூறு­கி­றது.

இதில் முதா­ல­வது நோக்­க­மாக கூறப்­ப­டும் ஒரு தலைக் காதல் பிரச்­சனை தொடர்­பில் மாண­வி­யின் தாய் சாட்­சி­ய­ம­ளிக்­க­வில்லை. அவ­ரி­டம் முதன்மை விசா­ர­ணை­யின் போது , மாணவி பாட­சாலை சென்று வரும் போது பிரச்­சனை ஏதே­னும் இருந்­ததா ? மாண­விக்கு காதல் தொடர்பு இருந்­ததா ? என கேட்ட போது, இல்லை எனப் பதி­ல­ளித்­துள்­ளார். குறுக்கு விசா­ர­ணை­யின் போது, பாட­சாலை சென்று வரும் போது யாரே­னும் தொந்­த­ரவு செய்­வ­தாக வீட்­டில் கூறி­யுள்­ளாரா? எனக் கேட்ட போது அதற்­கும் இல்லை என அவர் பதி­ல­ளித்­துள்­ளார்.

மாண­வியை 6ஆம் எதிரி ஒரு தலை­யா­கக் காத­லித்து தொந்­த­ரவு பண்ணி இருந்­தால் , மாண­வி­யின் வீட்­டா­ருக்கு நிச்­ச­யம் தெரிந்து இருக்­கும்.
அடுத்து சம்­பவ இடத்­தில் நின்­ற­தாக கண்­கண்ட சாட்­சி­யம் அளித்த சுரேஷ்­க­ரன் மற்­றும் மாப்­பிள்ளை எனும் புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் முர­ணான சாட்­சி­யங்­களை அளித்­துள்­ள­னர். சுரேஷ்­க­ரன் வீடியோ எடுத்­தது தெரி­யாது என சாட்­சி­யம் அளிக்­கின்­றார். மாப்­பிள்ளை வீடியோ எடுத்­தார்­கள் என சாட்­சி­யம் அளித்­தார். அதே­போன்று சுரேஷ்­க­ரன் மாண­வியை இழுத்து சென்­ற­தாக சாட்­சி­யம் அளித்­தார்.

மாப்­பிள்ளை மாண­வியை நால்­வர் கைகள் மற்­றும் கால்­களை பிடித்து தூக்கி சென்­ற­தாக சாட்­சி­யம் அளித்­துள்­ளார். அதே­போன்று சுரேஷ்­க­ரன் மாண­வி­யின் உடை­களை பாழ­டைந்த வீட்­டுக்­குள் வைத்து கழட்­டி­ய­தாக சாட்­சி­யம் அளித்­தார். மாப்­பிள்ளை பற்­றைக்­குள் வைத்து உடை­களை கழட்­டி­ய­தாக சாட்­சி­யம் அளித்­தார். சட்ட மருத்­துவ அதி­காரி சாட்­சி­யத்­தின் போது, மாண­வி­யின் நகங்­க­லி­னுள் தசை துண்­டு­கள் இருந்­த­தா­க­வும் அத­னால் அதனை பரி­சோ­த­னைக்கு அனுப்­பி­ய­தா­க­வும் கூறி­யி­ருந்­தார்.

நகங்­க­லி­னுள் தசை­கள் இருந்து இருப்­பின் மாணவி எதி­ரி­க­ளு­டன் போரா­டி­ய­தால் அவர்­க­ளுக்கு நக கீறல்­கள் ஏற்­பட்­ட­மை­யால்­தான் எதி­ரி­க­ளின் தசை­கள் நகங்­க­லி­னுள் இருந்து இருக்­கும்.அவ்­வாறு எனில் மாண­வி­யின் கைகள் சுதந்­தி­ர­மாக எதி­ரி­யு­டன் போராட கூடிய நிலை­யில் இருந்­துள்­ளது. எனவே மாண­வி­யின் கைகளை அழுத்தி பிடிக்­க­வில்லை. ஆனால் கண்­கண்ட சாட்­சி­யம் என சாட்சி அளித்­த­வர்­கள் கைகளை எதி­ரி­கள் பிடித்து இருந்­த­தா­கக் கூறி­னார்­கள்.
அதே­போன்று மாண­வி­யின் தலை­யில் ஏற்­பட்ட காயம் விழுந்­த­தால் ஏற்­பட்ட காயம் இல்லை என சட்ட மருத்­துவ அதி­காரி தெரி­வித்­தார்.

ஏனெ­னில் விழுந்து இருந்­தால் மண்­டை­யோடு வெடித்து இருக்­கும் என , தலை­யில் ஏற்­பட்ட காயம் மட்­ட­மான ஆயு­தத்­தால் தாக்­கி­ய­தால் ஏற்­பட்டு இருக்­க­லாம் என தெரி­வித்­தார். அத­னால் மனை­வியை தலை­யில் தாக்­கிய பின்­னர் வன்­பு­ணர்வு செய்­துள்­ள­னர்.இந்த குற்­றச்­செ­ய­லு­டன் தொடர்­பு­டைய போது­மான சான்­றுப் பொருள்­கள் ஜின்­டேக் நிறு­வ­னத்­திற்கு அனுப்பி வைக்­க­பப்ட்­டி­ருந்­தன. அதன் பரி­சோ­த­னை­யில் எந்த அறிக்­கை­யும் எதி­ரி­க­ளு­டன் ஒத்து போக­வில்லை. எனவே இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் எதி­ரி­கள் மீது சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்க முடி­ய­வில்லை. உண்மை குற்­ற­வா­ளி­கள் தப்பி சென்­று­விட்­ட­னர்” எனத் தெரி­வித்­தார்.

அதனை தொடர்ந்து 4ம், 7ம் , மற்­றும் 9ம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் தொகுப்­பு­ரை­யில், “கண்­கண்ட சாட்சி என சாட்­சி­யம் அளித்த சுரேஷ்­க­ரன் மாண­வி­யின் கையை யார் பிடித்­தது , காலை யார் பிடித்­தது என தெளி­வாக சாட்­சி­ய­ம­ளித்­தார். அவர் ஒளிப்­ப­டங்­கள் மற்­றும் காணொலி எடுத்­தது தொடர்­பில் தெரி­யாது எனச் சாட்­சி­யம் அளித்­துள்­ளார். காணொலி எடுத்­தைப் பார்த்­த­தாக கூறிய மாப்­பிள்­ளை­யின் சாட்­சி­யம் நம்­ப­கத்­தன்­மை­யற்­றது என 5 ஆம் எதி­ரி­யின் சட்­டத்­த­ரணி கூறி­யள்­ளார். அத­னையே நானும் கூறு­கி­றேன்.

ஆல­டிச் சந்­தி­யில் 12ஆம் திகதி (மாணவி கடத்­தப்­ப­டு­வ­தற்கு முதல் நாள்) சுவிஸ்­கு­மார் உள்­ளிட்­ட­வர்­களை வாக­னத்­தில் கண்­ட­தாக சாட்­சி­யம் அளித்த இலங்­கேஸ்­வ­ரன், தான் கடை­யில் நின்று பார்த்த போது சுவிஸ்­கு­மார் கறுத்த கண்­ணாடி அணிந்து வித்­தி­யாவை பார்த்­ததை பார்த்­தேன் என சாட்­சி­ய­ம­ளித்­தார். பிர­புக்­கள் பாது­காப்பு பிரிவை சேர்ந்­த­வர்­கள் கறுப்பு கண்­ணாடி அணிந்து பாது­காப்­பில் ஈடு­ப­டு­வார்­கள். அவர்­கள் யாரை எங்கே பார்க்­கின்­றார்­கள் என்­ப­தனை எதி­ரில் உள்­ள­வர்­கள் அவ­தா­னிக்க முடி­யாது என்­ப­தற்­கா­கவே அவ்­வாறு கறுப்­புக் கண்­ணா­டி­கள் அணி­வார்­கள்.

அப்­படி இருக்­கை­யில் சுவிஸ்­கு­மார் கறுப்பு கண்­ணாடி போட்டு வித்­தி­யா­வை­தான் பார்த்­தார் என எவ்­வாறு அவ­ரால் சாட்­சி­யம் அளிக்க முடிந்­தது” என தெரி­வித்­தார். அதன் போது சட்­டத்­த­ரணி கறுத்த கண்­ணாடி கொண்­டு­வந்து அதனை தான் அணிந்து காட்டி தன்­னு­டைய கரு­மணி எங்கே பார்க்­கின்­றது என அவ­தா­னிக்க முடி­யாது என தீர்ப்­பா­யத்­துக்­குக் கூறி­னார்.

அதனை ஏற்க மறுத்த நீதி­ப­தி­கள் பார்க்­கும் திசையை வைத்து யாரைப் பார்க்­கி­றீர்­கள் எனக் கூற முடி­யும் என சுட்­டிக்­காட்­டி­னர். அதன் போது நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னும் கறுத்த கண்­ணா­டியை அணிந்து பார்த்­தார்.
மற்­று­மொரு முக்­கி­ய­மான சாட்­சி­ய­மாக முற்­ப­டுத்­த­பப்­பட்ட இப்­ரான் என்­ப­வர் மோச­டிக்­கா­ரன். அவர் மோசடி வழக்­கில் சிறைத்­தண்­டனை அனு­ப­விப்­ப­வர். அவர் இந்த தீர்ப்­பா­யத்­தில் மோசடி சாட்சி அளித்­துள்­ளார்.

தனக்கு இந்த குற்­றச்­செ­யல்­கள் தொடர்­பில் சுவிஸ்­கு­மார் மாத்­தி­ரம்­தான் கூறி­ய­தா­க­வும் வேறு எந்த எதி­ரி­க­ளும் இந்­தக் குற்­றச்­சம்­ப­வம் தொடர்­பில் தன்­னு­டன் கதைக்க வில்லை என அவர் சாட்­சி­யம் அளித்­துள்­ளார்.
அதே­போன்று தான் சிறை­யில் , சிறை­சாலை அத்­தி­யட்­ச­க­ரின் அறை­யில் மருத்­துவ பரி­சோ­த­னையை முடித்து வெளியே வந்த போதே குற்­ற­பு­ல­னாய்வு திணைக்­கள பொலிஸ் பரி­சோ­த­கரை கண்­ட­தாக அவர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
ஆனால் குற்­ற­பு­ல­னாய்வு திணைக்­கள பொலிஸ் பரி­சோ­த­கர் சாட்­சி­யம் அளிக்­கை­யில் ,அவ்­வாறு மருத்­து­வர்­கள் எவ­ரை­யும் தான் காண­வில்லை என சாட்சி அளித்­தார்.

அதே­போன்று தான் கட­னட்டை (கிர­டிட்­கார்ட்) மோசடி வழக்­கில்­தான் தண்­டனை பெற்­ற­தா­க­வும், அது­வும் தான் செய்­யாத குற்­றம் என­வும் , தனது நண்­பன் செய்த குற்­றத்­திற்­கா­க­வும் தான் சிறை தண்­டனை அனு­ப­விப்­ப­தாக சாட்­சி­ய­ம­ளித்­தார். ஆனால் குற்­ற­பு­ல­னாய்வு திணைக்­கள பொலிஸ் பரி­சோ­த­கர் சாட்­சி­யம் அளிக்­கை­யில், வெளி­நா­டு­க­ளுக்கு ஆள்­களை அனுப்­பு­வ­தாக கூறி பண மோச­டி­யில் ஈடு­பட்­ட­த­னால்­தான் அவர் சிறை தண்­டனை அனு­ப­விப்­ப­தக சாட்­சி­ய­ம­ளித்­தார்.

இப்­ரான் தனது சாட்­சி­யத்­தில் சொல்­கின்­றார், சுவிஸ் நாட்­டில் மாபிய கும்­பல் உள்­ளது. அந்­தக் கும்­ப­லால் ஆசிய பெண்ணை கடத்தி வன்­பு­ணர்ந்து படு­கொலை செய்­வ­தனை நேர­டிக் காணொலி எடுக்க வேண்­டும் என சுவிஸ் குமா­ரு­டன் உடன்­பாடு செய்­த­தாக. ஏன் ஆசி­யா­வில் அழ­கான பெண் புங்­கு­டு­தீ­வில்­தான் உள்­ளாரா ? சிங்­கப்­பூ­ரில் எத்­தனை அழ­கான பெண்­கள் உள்­ள­னர். அவ்­வாறு இருக்­கை­யில் இலங்­கை­யில் புங்­கு­டு­தீ­வில் பாட­சா­லை­யில் கற்­கும் மாண­வி­தான் வேண்­டுமா ? அந்த சுவிஸ் மாபியா கும்­ப­லுக்கு, இந்த கதை எல்­லாம் திரைப்­பட கதை போன்­றுள்­ளது.

இந்த கதையை மோசடி குற்­றச்­சாட்­டில் சிறை தண்­டனை பெற்­ற­வர் சட்­சி­ய­மாக கூறி­யுள்­ளார். இதனை நம்­பவே முடி­யாது. அத்­து­டன் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை­யில் எனது தரப்­பான 4ஆம் எதிரி , 7ஆம் எதிரி மற்­றும் 9ஆம் எதிரி ஆகி­யோர் கொழும்­பில்­தான் நின்­ற­னர். 12ஆம் திகதி புங்­கு­டு­தீ­வில் வாக­னத்­தில் எனது தரப்பை சேர்ந்­த­வர்­களை கண்­ட­தாக இலங்­கேஸ்­வ­ரன் என்­ப­வர் இந்த மன்­றில் கூறிய சாட்சி சொல்­லிக்­கொ­டுக்­க­பப்ட்ட பொய் சாட்­சி­யா­கும்.
இந்­தக் குற்­றச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய 1 தொடக்­கம் 22 வரை­யி­லான சான்று பொருள்­கள் எவை­யும் எனது தரப்­பி­னர் குற்­ற­வா­ளி­கள் என காண்­ப­தற்கு ஏது­வாக இல்லை.

எனது தரப்­பி­னர் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் எவை­யும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்க முடி­ய­வில்லை என தனது தொகுப்­பு­ரை­யில் தெரி­வித்­தார்.
அதனை தொடர்ந்து எதி­ரி­கள் தரப்பு தொகுப்­புரை முடி­வு­றுத்­தப்­பட்­டது. வழக்கு தொடு­னர் தரப்பு மற்­றும் எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­கள் எழுத்­து­மூ­லம் முன்­வைப்­புக்­கள் இருப்­பின் அதனை நாளை வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்­னர் பதி­வா­ள­ரி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது.

எதிர்­வ­ரும் 27ஆம் திகதி மாணவி கொலை வழக்கு தீர்ப்பு வழங்­கப்­ப­டும் என தீர்ப்­பா­யம் அறி­வித்­தது. அன்­றைய தினம் மாண­வி­யின் தாயாரை தீர்ப்­பா­யத்­தில் முன்­னி­லை­யாக அழைப்­பாணை அனுப்­பு­மாறு பதி­வா­ள­ருக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டது. 11ஆவது சந்­தே­க­ந­ப­ராக கைது செய்­யப்­பட்டு சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தால் நிபந்­த­னை­க­ளு­டன் கூடிய பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு அரச தரப்பு சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட உத­ய­சூ­ரி­யன் சுரேஷ்­க­ரன் தற்­போது வவு­னியா சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவரை 27ஆம் திகதி தீர்ப்­பா­யத்­தில் முற்­ப­டுத்­து­மாறு சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. அதனை தொடர்ந்து ஒன்­பது எதி­ரி­க­ளை­யும் எதிர்­வ­ரும் 27ஆம் திகதி வரை­யில் விளக்க மறி­யி­லில் வைக்­கு­மாறு தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget