சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 6.3 இன்ச் குவாட் எச்டி+இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, ஐரிஸ் ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர், இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்துடன் இந்தியாவில் வெளியீட்டிற்கு முன்னரே சுமார் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ப்ளூடூத் 5.0, எல்டிஇ
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
முதற்கட்டமாக S8 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்ஸ்பி அசிஸ்டண்ட் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிலும்
வழங்கப்பட்டுள்ளது. பிரத்தியேக பிக்ஸ்பி ஹார்டுவேர் பட்டன் மற்றும் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 8 சலுகைகள்:
- சாம்சங் கேல்கஸி நோட் 8 முன்பதிவு செய்வோருக்கு ஒருமுறை திரையை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வசதி
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு வாங்குவோருக்கு ரூ.4,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 448 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்று்ம மேப்பிள் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.67,900 முதல் துவங்கும் கேலக்ஸி நோட் 8 விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்வதோடு வாடிக்கையாளர்கள் சாம்சங் விற்பனை மையங்களிலும் வாங்க முடியும்.
Post a Comment