இலங்கையானது முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளபோதிலும் இன்னும் பல துறைகளில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக காணிகளை மீளளிக்கவேண்டும் என்பதுடன் காணாமல்போனவர்களின் விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் 27 சர்வதேச சாசனங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக மதிப்பீடு செய்வதற்கு இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் நேற்றையதினம் தமது மதிப்பீட்டை முடித்துக்கொண்டனர். இது தொடர்பில் அறிக்கைவிடுத்துள்ள இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது
மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளது. ஆனால் மேலும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் வெளிக்காப்பட்டபடவேண்டியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரையும் ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த குழு வடமாகாண முதலமைச்சரை சந்தித்ததுடன் சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இந்த தூதுக்குழுவினர் பேச்சு நடத்தினர். குறிப்பாக சித்திரவதைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட வேண்டும். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகள் மீள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் காணாமல்போனவர்களின் விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும்.
Post a Comment