Ads (728x90)

'உருத்திரம்' என்றால் 'உருத்திர மூர்த்தி', 'அட்சம்' என்றால் 'கண்'. உருத்திர மூர்த்தியின் கண்ணில் இருந்து தோன்றியதால் உருத்திராட்சம் என்ற பெயர் ஏற்பட்டது. சைவ சமயத்தைச் சார்ந்தவர்களின் சின்னங்கள் இரண்டு. ஒன்று விபூதி, மற்றொன்று உருத்திராட்சம் ஆகும்.

இவற்றை உபயோகிப்பவர்கள் இறைவனின் அருளுக்கு பாத்திரமாவதாக ஐதீகம். சிவபெருமானின் திருநயனங்களில் தோன்றியதுதான் உருத்திராட்சம் என்பர். அதை அணிந்து கொள்ளும் பொழுது உடல் நலம் சீராகின்றது. இவற்றை உபயோகிப்பவர்கள் தெய்வீகப் பற்று மேலோங்கி விளங்குவர். காந்த ஆற்றலையும், மின்னாற்றலையும் உடையது உத்திராட்சமாகும்.

அதன் நேர் கோடுகளை முகம் என்று கணக்கிடுகின்றோம். திருமுறைகள் கூறும் பொழுதும் சந்தியாவந்தன காலத்திலும் உருத்திராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். இதில் பொன், வெள்ளி போன்றவற்றை இணைத்து அணிந்து கொள்ளலாம். எடுத்து வைக்கும் பொழுது பட்டுப் பையில் வைப்பது நல்லது.

108 மணிமாலை அணிந்து சிவனை வழிபட்டால் அசுவ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன. மாதவிலக்கு உடைய பெண்கள் உருத்திராட்ச மாலையைத் தொடும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் வேறு மாலையை மாற்றிக் கொள்வது தான் நன்மையைத் தரும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget