Ads (728x90)

மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர்  நீதிமன்றத்தில் விஜய் மல்லையா இன்று(செப்.,14) ஆஜராகிறார்.பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப தராமல் லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். இதையடுத்து, அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையா ஆஜராக உள்ளார்.இந்நிலையில், விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு  சமர்ப்பிக்கப்பட உள்ளது. 2 மாதங்களில் மல்லையா நாடு கடத்தப்படுவார் என்று இங்கிலாந்து நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

Recent News

Recent Posts Widget