Ads (728x90)

பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்ட சுஜாவின் சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நீங்கள் வீட்டுக்குள் செல்லலாம், சுஜா என்று கூறியதை கேட்டு ஆச்சரியத்துடன் கன்பெக்‌ஷன் அறைக்குள் வந்த சுஜாவை, இரண்டு பேரை நாமினேட் செய்யச் சொன்னார் பிக்பாஸ்.

சுஜா முதலில் நாமினேட் செய்தது ஆரவ். அதற்கான காரணத்தையும் சொன்னார். அடுத்த நாமினேஷனாக சிநேகனை  சொன்னார். என்னை லூசுப் பொண்ணுண்னு சொல்றார். நான் சரியான விஷயத்திற்கு மட்டும்தான் எமோஷன் ஆகிறேன். நான் கல்லு கிடையாது. நேத்து நான் வெளியே கிளம்பும் போது அவர் கூட அழுதார். வார்த்தை என்னைக் காயப்படுத்தியது என்றார்  சுஜா. 
 
பிறகு பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சுஜாவை இதர போட்டியாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆனால் சுஜா எவ்வித  சலசலப்பும் இல்லாமல் அமைதியாக வருவதைப் பார்த்து குழப்பமடைந்தனர். சுஜா அமைதியாக வந்தது மட்டுமல்லாமல், பிந்துவை நோக்கி சைகையால் கைகளை ஆட்டினார். 
 
இதனை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் நாமினேஷன் காரணங்களைக் கூறினார்கள். இறுதியாக வையாபுரி. ஆரவ், ஹரிஷ்,  சிநேகன் ஆகியோர் நாமினேட் பட்டியலில் இடம் பிடித்தனர்

Post a Comment

Recent News

Recent Posts Widget