Ads (728x90)

அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தைக் குத்­த­கைக்கு எடுத்­துள்ள சீன நிறு­வ­னம் இலங்கை அர­சி­டம் முழு­மை­யான வரிச்­ச­லுகை கோரி­யுள்­ள­தால் அதை வழங்­கு­வதா? இல்­லையா என்ற விட­யத்­தில் கூட்டு அர­சுக்­குள் கடும் கருத்து மோதல் ஏற்­பட்­டுள்­ள­தாக அரசு தரப்­புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.
வரிச்­ச­லுகை வழங்­கும் யோச­னைக்கு ஒரு தரப்பு ஆத­ர­வை­யும், மற்­றைய தரப்பு கடும் எதிர்ப்­பை­யும் வெளி­யிட்டு வரு­வ­தா­லேயே இத்­த­கை­ய­தொரு சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

அம்­பாந்­தோ­ட்டைத் துறை­மு­கத்தைச் சீனா­வின் மேர்ச்­சன்ட் போட் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு 99 ஆண்­டு ­க­ளுக்குக் குத்­த­கைக்கு வழங்­கும் கூட்­ட­ர­சின் திட்­டத்­துக்குக் கடும் எதிர்ப்­பு­கள் வலுத்­தன. அப்­போ­தைய நீதி அமைச்­சர் விஜ­ய­தா­ச­வும் போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­தார். எதிர்ப்­ப­லை­க­ளை­யும் மீறி அதை அரசு குத்­த­கைக்கு வழங்­கி­யது.

வரிச்­ச­லுகை வழங்­கி­னால் அது அர­சுக்கு மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி ஆட்சி மாற்­றத்­துக்கு வழி­வ­குத்­து­வி­டும் என்­பதே வரிச்­ச­லு­கையை வழங்­கு­வதை எதிர்க்­கும் தரப்­பின் தர்க்­க­மாக இருக்­கின்­றது.  திறை­ சே­ரி­யி­லுள்ள உயர்­மட்­டப் பிர­மு­கர்­க­ளும் இந்­தத் திட்­டத்­துக்குப் பச்­சைக்­கொடி காட்ட மறுத்­து­விட்­ட­தாக அறி­ய­ மு­டி­கின்­றது.

அம்­பாந்­தோட்டை நிறு­வ­னத்தைக் குத்­த­கைக்கு எடுத்­துள்ள நிறு­வ­னத்­துக்கு அதில் 70 சத­வீத உரி­மம் இருக்­கின்­றது. மீத­முள்ள 30 சத­வீத உரி­மம் இலங்­கைத் துறை­முக அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. 1.12 பில்­லி­யனை மேர்ச்­சன்ட் போட் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் துறை­மு­கத்­தில் முத­லி­டும் என்று உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. வரிச்­ச­லுகை வழங்­கி­னால் அது அந்த நிறு­வ­னத்தை ஊக்­கு­விக்­கும் என்­றும், மேல­திக மூல­த­னப் பாய்ச்­ச­லுக்கு அது வழி­வ­குக்­கும் என்­றும் வரிச்­ச­லுகை வழங்­க­ வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் இருப்­ப­வர்­கள் கருத்­து­க்களை முன்­வைத்­துள்­ள­னர்.

கடந்த ஜூலை 17ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்ட குத்­தகை உடன்­ப­டிக்­கை­யில் அதை எந்த நேரத்­தில் வேண்­டு­மா­னா­லும் மாற்­றி­ய­மைக்­க­லாம் என்ற சரத்து உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது என்று இலங்கை அரசு கூறி­னா­லும் அது பற்றி இன்­னும் உத்­தி­யோ­க­ பூர்வத் தக­வல் வெளி­யா­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget