இந்திய அணி விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனிக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவிக்க கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது.இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக புகழ் பெற்றவர் டோனி (36 வயது). இவரது தலைமையின் கீழ் இந்திய அணி டி20 (2007) மற்றும் ஒருநாள் போட்டியில் (2011) ஐசிசி உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இதுவரை 302 ஒருநாள் போட்டிகளில் 9737 ரன், 78 டி20ல் 1212 ரன், 90 டெஸ்டில் 4876 ரன் விளாசியுள்ளார். சர்வதேச போட்டிகளில் 16 சதம் மற்றும் 100 அரை சதம் அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக 584 கேட்ச் (டெஸ்ட் 256, ஒருநாள் 285, டி20 - 43), 163 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஏற்கனவே அர்ஜுனா, ராஜிவ் காந்தி கேல்ரத்னா, பத்ம விருதுகளைப் பெற்றுள்ள டோனிக்கு, நாட்டின் 3வது உயரிய விருதான பத்மபூஷண் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. பரிந்துரை ஏற்கப்பட்டால் சச்சின், கபில், கவாஸ்கர், டிராவிட் உட்பட இந்த விருதைப் பெறும் 11வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை டோனிக்கு கிடைக்கும்
Post a Comment