Ads (728x90)

சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து . தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்கள் வருமாறு:

*இரட்டைஇலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

*ஜெயலலிதா நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பதவிகளில் நீடிப்பார்கள்

*எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அரசுக்கு பாராட்டு. விழா தொடர்ந்து நடக்கும்

*ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கிய அரசுக்கு நன்றி

*வார்த் புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு*தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது.

*உள்ளாட்சி தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்* சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து

* ஜெ.,க்கு பின் கட்சியில் பொதுச் செயலாளர் யாரும் கிடையாது. அவர் தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Post a Comment

Recent News

Recent Posts Widget