Ads (728x90)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று அபு­தாபி சேக் சைட் சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. ஏற்­க­னவே டுபாய் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் இலங்கை அணி 83 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இந்த தோல்­வி­யி­லி­ருந்து மீண்­டெ­ழுந்து இன்­றைய போட்­டியில் இலங்கை அணி வெற்­றியைப் பதிவு செய்­யுமா என்­ப­துதான் இலங்கை கிரிக்கெட் ரசி­கர்கள் அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாக உள்­ள­து.

பாகிஸ்­தா­னு­ட­னான மூன்று வகை­யான போட்டித் தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ்­ஸுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி ஏற்­க­னவே இங்கு நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை முழு­மை­யாக வென்று வெள்­ளை­ய­டி­­த்­தது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மோதும் ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்­டியில் இலங்கை அணி தோல்­வி­ய­டைந்து ஏமாற்­ற­ம­ளித்­தது.

இந்தத் தோல்­விக்கு இலங்கை அணி வீரர்­களின் இட­மாற்­றமே முக்­கிய காரணம் என குமார் சங்­கக்­கார குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார். இலங்கை அணியின் முக்­கிய ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான குசல் ஜனித் பெரேரா மற்றும் தனுஷ்க குண­தி­லக ஆகிய இரு­வரும் அணியில் இல்­லாமல் போனது இலங்கை அணியின் துடுப்­பாட்ட வரி­சைக்கு பெரும் பின்­ன­டை­வாக அமைந்­து­விட்­டது.

அதே­வேளை குசல் மெண்­டிஸை ஐந்­தா­வ­தாக களமிறக்கி சந்­தி­மாலை ஆரம்­பத்­தி­லேயே அனுப்பி அணியின் சீரற்ற தன்­மையை ஆரம்­பத்­தி­லேயே உரு­வாக்­கி­விட்­டதும் ஒரு­வேளை துடுப்­பாட்­டத்தில் பின்­ன­டைவைக்காண கார­ண­மாக அமைந்­தி­ருக்­கலாம்.

எது எப்­ப­டியோ இன்­றைய போட்­டியில் இந்த குறை­பா­டுகள் அனைத்­தையும் இலங்கை நிவர்த்தி செய்து பாகிஸ்­தா­னுக்கு பதி­லடி கொடுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதே­வேளை ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்­த­வுடன் 3 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் மோத­வுள்ளது இலங்கை.

இரு­ப­துக்கு 20 போட்டித் தொடரின் கடைசிப் போட்டி மட்டும் பாகிஸ்­தானின் லாகூரில் நடத்­து­வ­தற்கு முடி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலையில் பாகிஸ்­தா­னுக்கு சென்று விளை­யாட இலங்கை வீரர்கள் தயங்­கு­கி­றார்கள். அணியில் இடம் பெற்­றுள்ள வீரர்கள் மற்றும் ஒப்­பந்­தத்தில் இருக்கும் வீரர்கள் கையெ­ழுத்­திட்டு ஒரு கடி­தத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கைய­ளித்­துள்­ளனர். அதில் பாகிஸ்­தா­னுக்கு சென்று விளை­யாட விரும்­ப­வில்லை என்றும், லாகூர் போட்­டியை வேறு நாட்­டுக்கு மாற்­று­வது குறித்து பரி­சீ­லிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இதனால் இந்த ஆட்­டமும் ஐக்­கிய அரபு எமி­ரே­ட்ஸிலேயே நடத்­தப்­படும் என்று தெரி­கி­றது.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்­தானில் விளை­யா­டிய போது, அவர்கள் சென்ற பஸ் மீது பயங்­க­ர­வா­திகள் துப்­பாக்கிச்சூடு நடத்­தி­யதும் அதன் பிறகு பெரிய அணிகள் பாகிஸ்­தா­னுக்கு செல்ல மறுப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

கடைசி போட்­டியை பாகிஸ்­தானில் நடத்­து­வது குறித்து ஆரம்­பத்தில் கருத்து தெரி­வித்­தி­ருந்த இலக்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஆஸ்லி டீ சில்வா, வீரர்­களின் பாது­காப்­புத்தான் எமக்கு முக்­கியம். அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திய பின்பே நாம் அங்கு சென்று விளையாடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

அதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News

Recent Posts Widget