திருகோணமலை நகர்பகுதியில் வெள்ளியன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 15 பெண்கள் அழகு கலை நிலையங்களுக்கும் 07 வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சுற்றி வளைப்பில் திருகோணமலை நகர்ப்பகுதியில் 15 பெண்கள் அழகு படுத்தும் நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய தரவுகளை பெற்றுள்ளதாகவும் அதில் காலாவதியான முகப்பூச்சிகளை வைத்திருந்தமை அவற்றைக் காட்சிப்படுத்தியமை காலாவதி மற்றும் உற்பத்தி திகதி பொறிக்கப்படாத கிறீம் வகைகள் பாவனைக்குட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குள் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்காக 07 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment