Ads (728x90)

ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண்  பணியாளர்கள் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் மயக்கம்  ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget