Ads (728x90)

பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால், உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படும் தகவலை வெளியிட்டுள்ள, ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு, இவ்விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தூய்மையற்ற பகுதிகளை தூய்மையாக்குவது, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படாத காய்கறிகளை மட்டுமே வாங்குவது, என்பது உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு பரிந்துரைத்துள்ளது. மண்ணையும் அதன் வளத்தையும் பாதுகாக்கும் இந்த முயற்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும் என்றும், ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget