Ads (728x90)

சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 40 பேர் பலியாகி பலர் காயமடைந்தனர்.

சஃபாரி விடுதி அருகே கேம்5 சந்திப்பில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டதில் பயங்கர சேதம் ஏற்பட்டதாக நேரில் பார்த்த அதான் மொகமது சினுவா செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

பலியானவர்களில் பலர் அப்பாவிக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை அதிகாரிகள் யாரும் நுழைய முடியாவண்ணம் தடை ஏற்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டு வெடிப்புச் சம்பவ இடத்தில் இருந்த ஹம்தி எல்மி என்ற மற்றொரு நபர் கூறும்போது குண்டுவெடிப்பின் போது பயங்கரமான சப்தம் எழுந்ததாகவும் சுற்றுவட்டாரப்பகுதிகள் குலுங்கியதாகவும் தெரிவித்தார்.

“நான் ஒரு பொது ஊழிய வாகனத்தில் அப்போது இருந்தேன். பின் பக்கம் கடுமையான கரும்புகை சூழ்ந்தது, மொத்த இடமும் பயங்கரமாக குலுங்கியது. இதில் ஜன்னல்கள், சில கட்டிடங்களின் கதவுகளும் சேதமடைந்தன” என்றார்.

இதனால் அப்பகுதியில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget