பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு காரணமாக எம்.பி., பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீப் இழந்தார். அந்த நாட்டு சட்ட விதிகளின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மட்டுமே கட்சி பொறுப்புகளை வகிக்க முடியும். அதன்படி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியையும் நவாஸ் ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பான சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்ட திருத்தத்தின்படி அரசு ஊழியர் அல்லாத யார் வேண்டுமானாலும் கட்சிப் பொறுப்புகளை வகிக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நவாஸ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Post a Comment