
கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பில் இன்று வியாழக்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்குலக செல்வந்த நாடுகளின் பொருளாதார கொள்கைகள் தற்போது வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சீனாவிடமிருந்து அமெரிக்கா சுமார் 3.3 ரில்லியனை கடனாக பெற்றுள்ளது. இவ்வாறான நிலைமைகளே மேற்குலக நாடுகளில் காணப்படுகின்றது. இவற்றை பின்பற்றி செல்லும் தற்போதைய அரசாங்கமும் பாரிய பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை எதிர்கொள்ளப் போகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தணைகளுக்கு அடிப்பணிந்து கடனை பெற்றுக்கொணட்டுள்ள இலங்கை எதிர்வரும் காலங்களில் அதன் விளைவுகளை சந்திக்கும் நிலைமை ஏற்படும். குறிப்பாக அமெரிக்காவின் பின்னாள் செல்லும் இலங்கை விரைவில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பேராபத்துக்களை எதிர்கொள்ள போகின்றது.
அமெரிக்கா இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாக தொடர்புப்பட்டு செயற்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளை சவாலுக்குட்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நட்பை பேணும் போது இலங்கை போன்ற நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனை அனுமதிக்க முடியாது. இலங்கைக்கான உதவி திட்டங்களை அமெரிக்க குறைத்துள்ளது. எனவே எவ்விதமான நேர்மையான ஒத்துழைப்புகளும் இல்லாத நிலையில் அமெரிக்காவை பின்தொடர வேண்டிய தேவை என்ன ?
நாட்டு மக்கள் பட்டினி சாவில் உள்ளனர். அரசாங்கம் இவற்றுக்கு தீர்வு காணாது அமெரிக்கவிற்கு கடற்படை முகாம் அமைக்க திருகோணமலையில் செயற்பட்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணமாகியுள்ளார். அமெரிக்காவுடன் ஒருமித்து செயற்படும் பிரதமரின் கொள்கைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகியுள்ளது.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான நல்லாட்சி அரசாங்கம் பிரதமரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை பொது மக்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுப்போம். சமஷ்டி கொள்கைக்குள் நாட்டை கொண்டுச் செல்வதற்கு அரசியலமைப்பு ஊடாக பிரதமர் செயற்படுகின்றார்.
Post a Comment