Ads (728x90)

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட், உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான் ஆகியோர் அடங்கிய குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர்.

ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு ஏற்ப இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அதன் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆராயும் முகமாகவே அந்த குழு இலங்கை வரவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும், நாளைய தினம் வட மாகாணத்திற்கும்  விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் பிரதிநிதிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திப்பதற்கும் எதிர்பார்த்துள்ளனர்.

தென் ஆசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்த குழு மாலைதீவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்வரும் 2ம் திகதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget