சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பத்மாவதி படத்தை பாலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தீபிகா, சாகித் கபூர் மற்றும் ரன்வீர் சிங்கின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதோடு நேற்று முன்தினம் தீபிகாவின் கூமார் பாடல் வெளியிடப்பட்டது. இதில் தீபிகாவின் நடனமும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பல பாலிவுட் பிரபலங்களும் பாராட்டி வரும் வேளையில் நடிகை ஆலியா பட்டும், தீபிகாவை பாராட்டியிருக்கிறார்.
ஆலியா பட் கூறுகையில், பத்மாவதி படத்தில் தீபிகா பத்மாவதியாக அவ்வளவு அருமையாக உள்ளார். அவரைப்போன்று என்னால் நடிக்க முடியாது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment