Ads (728x90)

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரைத் தாக்கிய தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார தலுவத்தையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் கலந்துகொள்ளும் முகமாக அவரை வரவழைத்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர் இன்று (19) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேற்படி சம்பவம் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டதையடுத்து துஷார தலுவத்த உடனடியாக மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget