
அப்படி சொந்த தொழில் மூலம் அதிக லாபம் பெற்று முன்னேறியவர்களும் உண்டு. நஷ்டமடைந்து காணாமல் போனவர்களும் உண்டு. லாபரமான தொழில் செய்யக்கூடிய யோகம் எல்லோருக்குமே அமையாது. தொழிலை திறமையாகச் செய்து வாழ்க்கையில் முன்னேற ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.
சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அவர்கள் தினமும் காலை குளித்து விட்டு மஹாலக்ஷ்மி படத்திற்கு முன் பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை கலந்து நிவேதனம் செய்ய வேண்டும்.
ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கை ஏற்றி அந்த பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று நிறுவனத்தில் வேலை செய்யும் முக்கியஸ்தர்களுக்கு அல்லது அனைவருக்கும் உணவிட்டு வந்தால் தொழிலில் நஷ்டம் வராமல் விருத்தி அடையும்.
Post a Comment