தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் இருவரும் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள். இவர்களில் அனுஷ்கா நடித்த ருத்ரம்மா தேவி படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் அல்லு அர்ஜூன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் தமிழில் அறிமுகமானார் மகேஷ்பாபு.இந்நிலையில், ஸ்பைடர் படத்தை அடுத்து பாரத் அனே நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அரசியல் கதையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்திக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 2018ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளனர். அதே நாளில், அல்லு அர்ஜூன் நடித்து வரும் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா என்ற படமும் இதே வெளியாகிறது. ஆக, மகேஷ்பாபுவும், அல்லு அர்ஜூனும் ஒரே நாளில் மோதிக்கொள்ளப்போகிறார்கள்.
Post a Comment