புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த விசாரணையாளருக்கு சிறப்புப் பணப் பரிசில்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்கா இவற்றை நேற்று வழங்கி வைத்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்போதைய பணிப்பாளராக இருந்த சுதத் நாகஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பீ.ஏ.திசரா மற்றும் பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க உள்ளிட்ட 33 பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபா பணப் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
Post a Comment