Ads (728x90)

நடிகை ஓவியா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கமல் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

அரசியல் என்பது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் ஒரு மிகப்பெரிய அடித்தளம். தற்போது பலர் புகழ் மற்றும் பணத்திற்காக அரசியலை தவறாக பயன்படுத்துகின்றனர். கமல்ஹாசன் எனக்கு பிடித்தவர் மட்டுமின்றி, சிறந்த மனிதாபிமானி. அவர் அரசியலுக்கு வர வேண்டும். அதை நான் வரவேற்கிறேன்.

அரசியலுக்கு வந்து தான் அவருக்கு பணம், புகழ் வர வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே அவரிடம் புகழ், பணம் உள்ளதால், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வார் என நம்புகிறேன். அரசியலுக்கு அவர் வந்தால் நான் ஆதரிப்பேன். இதுவரை சினிமாவில் நடித்த அவர், இனிமேல் அரசியலுக்கு வர நினைத்திருக்கலாம். அதனால், அரசியல் சார்ந்த கருத்துகளை அவர் தெரிவிக்கிறார்.

நானும் இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காகத்தான். மற்றவர்கள் என்னைபற்றி என்ன நினைக்கிறார்களோ என்று எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. நான் இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன். ஏனென்றால் அரசியலே எனக்கு தெரியாது. சிறந்த படங்களில் நடிக்கவே நான் கவனம் செலுத்துகிறேன். என்கிறார் ஓவியா.

Post a Comment

Recent News

Recent Posts Widget