ஷாரூக்கான், கஜோல், கரண் ஜோகர் கூட்டணி என்றாலே அந்தப்படம் பிளாக்பஸ்டர் தான். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த குச் குச் ஹோத்தா ஹே, இந்திய சினிமாவின் எவர்கிரீன் ரொமான்ட்டிக் பிளாக்பஸ்டர் படம். கடந்தாண்டு வெளியான ஏய் தில் ஹே முஷ்கில் படத்திலேயே ஷாரூக் - கஜோலை நடிக்க வைக்க முயற்சித்தார் கரண். ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் இவர்களை இணைத்து ஒரு படம் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் கரண். கஜோல் தரப்பில் சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால் ஷாரூக் தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். அவர் ஓகே சொல்லிவிட்டால் மீண்டும் இவர்கள் கூட்டணி இணையும் என்கிறார்கள். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Post a Comment