Ads (728x90)

பொங்கலுக்கு பைரவா படத்தை தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக போகும் பிரம்மாண்ட படம் மெர்சல். விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் படத்தின் டீஸர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளனர். அதேசமயம் அரசுடன் வரி பிரச்சனை காரணமாக சினிமா பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால் கடந்த வாரம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

மெர்சல் படம் வருவதற்குள் பிரச்சனை முடிந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. மெர்சல் படத்துக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று விஷால் தன்னுடைய சண்டக்கோழி பட படப்பிடிப்பை கூட நிறுத்திவிட்டு இதற்காக கடுமையாக வேலை செய்திருக்கிறாராம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget