Ads (728x90)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி தனியார் நிறுவன கல்லூரி ஒன்றிற்கு விருந்தினராக அழைப்பட்டிருக்கிறார். அங்கு ஓவியா ரசிகர்கள் அவரை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றிற்கு விருந்தினராக சென்ற ஜூலி மாணவர்களுக்காக நடனம் ஆடியுள்ளார். அதன் பிறகு மாணவர்களுடன் பேச முயன்றுள்ளானர்.

ஆனால், அந்த கல்லூரியில் இருந்த ஓவியா ரசிகர்கள்  ஜூலிலை பேசவிடாமல் ஓவியா ஓவியா என கோஷமிட துவங்கியுள்ளனர். ஜூலி எவ்வளவு முயற்சித்தும் மாணவர் அவரை பேச அனுமதிக்கவில்லை.

இதனால், சிறுது நேரம் அமைதியாய் இருந்த ஜூலி மீண்டும் பேச துவங்கிய போதும் ஓவியாவின் பெயரை விடாமல் கூறிக்கொண்டே இருந்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி ஜூலிக்கு நன்றி கூறி அவரை பாதியிலேயே மேடையைவிட்டு இறக்கியுள்ளனர்.

இந்நிகழ்வு சம்பந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget