
பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியா பலவித சவால்களை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் அதனைக் கண்டு ஓடவில்லை. ஒன்றாக இணைந்து அதனை எதிர்கொள்வோம். காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கி உள்ளோம். 1000 காந்திகளாலும், ஒரு லட்சம் நரேந்திர மோடிகளாலும், அனைத்து முதல்வர்களாலும், அரசு துறைகள் ஒன்றிணைந்தாலும் உண்மையான தூய்மை இந்தியாவை கொண்டு வர முடியாது. இது 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்.
தூய்மை இந்தியா திட்டத்தால் நேர்மறை எண்ணங்கள் தோன்றி உள்ளன. இப்போது இந்திய மக்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தின் பின்னால் வர துவங்கி உள்ளனர். அவர்களின் வீடுகளை மட்டுமின்றி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதிலும் உதவ துவங்கி உள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்ட போது பலரும் அதனை விமர்சித்தனர். ஆனால் இப்போது, 3 ஆண்டுகளுக்கு பிறகு அது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
நான் இப்போதும் சொல்கிறேன், இது ஆரம்பம் தான். இந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து மிகப் பெரிய மாற்றத்திற்கு இது தூண்டுகோலாக இருக்கும். இத்திட்டத்தில் பங்கு பெறாதவர்களே இதனை விமர்சிக்கிறார்கள். ஆனால் இத்திட்டத்தில் இணைய நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டனர். தூய்மையே சேவை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு மோடி பேசி உள்ளார்
Post a Comment