Ads (728x90)


ஒன்பிளஸ் 5T சார்ந்த தகவல்கள் சீன வலைத்தளங்களில் கசிந்து வந்த நிலையில், இதன் ரென்டர் டுவிட்டரில் கசிந்துள்ளது. பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ரென்டர்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் மேல் பகுதி தெளிவாக காணப்படுகிறது.

மெல்லிய பெசல்கள், மிகப்பெரிய கேமரா சென்சார், சிம் ஸ்லாட் மற்றும் பவர் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 2.5D வளைந்த கிளாஸ் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ R11S போன்றே புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் காட்சியளிக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி + 2160x1080 பிக்சல், 18:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் 20 எம்பி பிரைமரி கேமரா, கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் முன்புறம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.   

மேலும் எவான் பிளாஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் நவம்பர் 20-ம் தேதிக்கு பின் அறிமுகம் செய்யப்படும் என்றும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 3450 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. வடிவமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget