
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பில், தான் கடுமையான அதிருப்தி கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, சிலருடைய தேவைகளுக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அரசியல்வாதிகளைச் சின்னாபின்னமாக்கு வதற்கு, அரச தலைவர் பங்குதாரராக இருக்கக்கூடாது, என்றும் கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
பிரதியமைச்சரின் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடும் அதிருப்தி கொண்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள், இந்த விவகாரம் தொடர்பில், கட்சியின் தலைவரான தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்துக்கும் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர்.
இந்த நிலையிலேயே, அவருக்கு எதிராக, கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.
Post a Comment