பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா பயணிக்கின்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா பயணிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி யில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை முன்னெடு க்கவுள்ளார்.
இதேவேளை நாளை மறுதினம் 23 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியின் எரோசிடியில் நடைபெறவிருக்கும் 5ஆவது உலக சைபர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தில் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி மற்றும் விசேட உதவியாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment