திருகோணமலைத் துறை முகத்தை இந்தியாவுக்கோ வேறெந்த நாட்டுக்கோ தாரைவார்க்க முற்பட வில்லை என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியா வங்களா விரிகுடாவுக்குள் அமைந்துள்ள ஒரு நாடு. அந்த நாடு வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் திருகோணமலைத் துறைமுகத் தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பி அனுமதி கோரியுள்ளது.
இலங்கைக்குச் சாதகமான நன்மைகளைப் பெற முடியும் என்பதால் அதற்கான அனுமதியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதேபோன்று ஜப்பானும் தனது விருப்பத் தைக் கோரியுள்ளது. இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
சிங்கப்பூர் மற்றும் எந்தவொரு நாடாக இருப்பினும் வங்களா விரிகுடாவை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள திருகோணமலைத் துறை முகத்தைக் கேந்திரமாகப் பயன்படுத்த விண்ணப்பித்தால் அது குறித்துக் சாதகமாக ஆராய முடியும்.
அப்படி நாம் செயற்படுவதை எமது துறைமுகத்தை மற்றொரு நாட்டுக்குத் தாரை வார்ப்பதாகக் கருத முடியாது. எமது நாட்டின் எந்தவொரு வளத்தையும் நாம் எவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை. சிலர் மக்களைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். கடந்த ஆட்சியின் போது எமது வளங்கள் விற்கப்பட்டது போன்று அரசு செய்ய முற்படமாட்டாது என் பதை உறுதியாகத் தெரி வித்துக் கொள்கின்றேன் என்றார்.
Post a Comment