ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்
மேடம்
நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். பிரயாணத்தால் செலவு அதிகரிக்கும்.
குடும்ப ஸ்தானம் பலம் குன்றி காணப்படுவதால் குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள்.
எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிஷ்ட நாட்கள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
இடபம்
எதிர்ப்புகள் விலகும். பிரையாணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். சக பணியாளர்கள் கை கொடுப்பார்கள்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பெண்களுக்கு புத்தி சாதூரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிஷ்ட நாட்கள்: திங்கள், செவ்வாய்
மிதுனம்
துணிச்சலான முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரவு தடை நீங்கி கைக்கு வந்து சேரும்.
தொழிலில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். தாய்வழி உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரங்களில் தகராறு உண்டாகும். அனைத்தையும் திறமையாக சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும்.
வழக்குகளில் சுமூக முடிவுகள் வந்து சேரும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமையில் தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
அதிஷ்ட நாட்கள்: புதன், வியாழன்
கடகம்
எதிர்ப்புகள் விலகும். நன்மைகள் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். சக பணியாளர்கள் கை கொடுப்பார்கள்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பெண்களுக்கு புத்தி சாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிஷ்ட நாட்கள்: திங்கள், செவ்வாய்
சிம்மம்
திடீர் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும்.
வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. இலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலிடத்திலிருந்து கனிவான செய்திகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிலும் சந்தோஷம், நிம்மதி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனகவலை அகலும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை நீங்கும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். எல்லா வகையிலும் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.
‘அதிஷ்ட நாட்கள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
கன்னி
வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்த காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். தனஸ்தான ராசியிலிருக்கும் குருவால் வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பணி நீடிப்பு, பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அதிகரிக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: துளசி அர்ப்பணித்து ஐயப்பனை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.
அதிஷ்ட நாட்கள்: புதன், வியாழன், வெள்ளி
துலாம்
மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ராசியதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். நன்மை உண்டாகும். திட்டமிடாத செயல்களால் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. மேலிடம் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு கேட்பது சிறந்தது.
சக பணியாளர்களிடம் மேலிடம் பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது. குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
அதிஷ்ட நாட்கள்: திங்கள், வியாழன், வெள்ளி
விருட்சிகம்
வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். ஆயுதங்களை கையாளும்போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பங்காளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது சிறிய சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.
கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.
அதிஷ்ட நாட்கள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
தனுசு
தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதியதாக வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும். எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.
அதிஷ்ட நாட்கள்: புதன், வியாழன், வெள்ளி
மகரம்
வீண் செலவுகள் ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு, மன சோர்வு ஏற்படலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
ஆனால் எதிர்பார்த்த லாபம் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். எதிர்நோக்கியியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
எந்த சூழ்நிலையிலும் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
அதிஷ்ட நாட்கள்: திங்கள், வியாழன்
கும்பம்
கிரகங்களின் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.
கணவன், மனைவிக்கிடையே பாசம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன பிணக்குகள் மறையும். சந்தோஷ சூழ்நிலை நிலவும். பிள்ளைகளின் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்குவீர்கள். புதிய வீடு மனை வாங்குவதற்கான வாய்ப்பு தானாக அமையும்.
பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். கலைத்துறையினர் கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.
பரிகாரம்: விநாயகரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
அதிஷ்ட நாட்கள்: வியாழன், வெள்ளி
மீனம்
முக்கிய காரியங்களை சுபமாக நடத்திக் கொள்வீர்கள். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வீடு மனை சார்ந்த வழக்குகளில் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்கள் பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
அதிஷ்ட நாட்கள்: புதன், வியாழன், வெள்ளி

Post a Comment