
மேலும் அவர் தனக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும்படி கூறியுள்ளார். இந்த சம்பளம் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் விரைவில் நடக்கவிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் கோஹ்லி, டோனி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் சம்பள விவரங்கள் வெளியிடப்பட்டன. கோஹ்லி 1 மில்லியன் டொலர் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ரவி சாஸ்திரி 1.17 மில்லியன் டொலர் சம்பளம் வாங்குகிறார். டோனி 1.1 மில்லியனுக்கும் குறைவாகவே வாங்கி வருகிறார்.
அதேபோல் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆஸி. வீரர் ஸ்மித் 1.47 மில்லியன் டொலர் சம்பளம் வாங்குகிறார். இதுதான் இப்போதைக்கு தனி நபருக்கு அளிக்கப்படும் அதிகபட்ச சம்பளமாகும். அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 1.27 மில்லியன் டொலர் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கோஹ்லி இதுகுறித்து பி.சி.சி.ஐ. கூட்டத்தில் பேசவுள்ளார். மேலும் இவருக்கு ஆதரவாக டோனி, ரவி சாஸ்திரி ஆகியோரும் பேசவுள்ளனர். இதற்கான கடிதத்தை கோஹ்லி ஏற்கனவே அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment