இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் 100–-150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.யாழ்ப்பாண பிரதேசத்தில் 95 வீதமான மழைவீழ்ச்சியும் முல்லைத்தீவில் 90 வீதமான மழைவீழ்ச்சியும் பதிவாகும்என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, கிளிநொச்சி, கேகாலை, மன்னார், மாத்தறை, மொனராகலை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மழையுடன் கூடிய காலநிலை தொடருமாயின் 50-–100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்.
ஏனைய மாவட்டங்களில் 25-–50 மில்லிமீற்றர் மழைபெய்யக்கூடும். எனினும் 75-–90 வீதமான மழை வீழ்ச்சியுடன் மழை அல்லது இடியுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை காணப்படும் பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்திருக்கும். பொதுமக்கள் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு கரையோர பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையுடன் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும். இப்பகுதி மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment